TNPSC Thervupettagam

தேசிய வாழைப்பழத் திருவிழா

February 18 , 2018 2502 days 857 0
  • கேரளாவின் திருவனந்தப்புரத்திலுள்ள கள்ளியூரில் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 தேதி வரை தேசிய வாழைப்பழ திருவிழா நடத்தப்பட்டது.
  • நாட்டில் உள்ள பல்வேறு வாழைப்பழ வகைகளை காட்சிப்படுத்துவதற்காகவும் வாழைப்பழம் மற்றும் வாழை மரத்தினுடைய பிற பகுதிகளின் பலதரப்பட்ட பயன்களைக் காட்சிப்படுத்துவதற்காகவும் இந்தத் திருவிழா நடத்தப்படுகின்றது.
  • தேசிய வாழைப்பழத் திருவிழாவின் கருப்பொருள் “பல்வகைமையைப் பாதுகாத்தல், அதன் அடையாளத்தை பராமரித்தல், மதிப்புக் கூட்டலை மேம்படுத்துதல் (Conserving Diversity, Preserving identity and promoting value addition) ஆகியனவாகும்.
  • கள்ளியூர் கிராம பஞ்சாயத்துடன் இணைந்து அறிவியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் புதுமைக்கான மையம் (Centre for innovation in Science & Social Action) இத்திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளது.
  • உலகின் மிகப்பெரிய வாழைப்பழ உற்பத்தியாளர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்