TNPSC Thervupettagam
December 7 , 2017 2574 days 871 0
  • தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலரான செழியன் ராமுவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜீவ் காந்தி மனவ் சேவா விருதை வழங்கினார்.
  • குழந்தைகளின் நல்வாழ்விற்கு அளப்பரிய பங்களிக்கும் தனிநபர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இவ்விருது நிறுவப்பட்டது.
  • நாடு முழுவதும் இவர் உட்பட மொத்தம் 3 பேர் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
  • இவர் திருவண்ணாமலையில் 1994-ஆம் ஆண்டு குழந்தைகள் மீட்பு மற்றும் கல்விக்காக டெர்ரி தேஸ் ஹோம்ஸ் குழந்தைகள் நிறுவனம் மற்றும் 1998-ல் ஓர் லைப்லைன்-ஐயும் அமைத்துள்ளார்.
  • மேலும் இவர் மாநிலம் முழுவதும் 16 காப்பக  இல்லங்களில் 900 குழந்தைகளை கவனித்து வருகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்