38வது தேசிய விளையாட்டு போட்டிகள் ஆனது உத்தரகாண்டில் 28 மாநிலங்கள், எட்டு ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் இராணுவப் படைகளின் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் (SSCB) ஆகியவற்றுடன் நடத்தப் பட்டது.
இதில் ராணுவப் படைகள் கடந்த முறையை விட அதிகமாக மூன்று தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்களைப் பெற்று, மொத்தம் 121 பதக்கங்களை வென்றது (68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம்).
கோவாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான போட்டியில் இது மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அதற்கு முன்னதாக, அது தொடர்ச்சியாக நான்கு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் (2007, 2011, 2015 மற்றும் 2022) பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
மகாராஷ்டிரா 198 (54 தங்கம், 71 வெள்ளி, 73 வெண்கலம்) பதக்கங்களுடன் இராணுவப் படைகளை விட அதிக பதக்கங்களை வென்றது ஆனால் அது மிகவும் குறைந்த ஒரு எண்ணிக்கையிலான தங்கப் பதக்கத்தினையே வென்றது.
ஹரியானா 153 (48 தங்கம், 47 வெள்ளி, 58 வெண்கலம்) பதக்கங்களுடன் இராணுவப் படைகளை விட அதிக பதக்கங்களைப் பெற்றது.
தமிழ்நாடு (27 தங்கம், 30 வெள்ளி, 34 வெண்கலம்), உத்தரகாண்ட் (24 தங்கம், 35 வெள்ளி, 43 வெண்கலம்), மேற்கு வங்காளம் (16 தங்கம், 13 வெள்ளி, 18 வெண்கலம்), பஞ்சாப் (15 தங்கம், 20 வெள்ளி, 31 வெண்கலம்) மற்றும் டெல்லி (15 தங்கம், 18 வெள்ளி, 29 வெண்கலம்) ஆகியவை இதில் முதல் 10 இடங்களைப் பிடித்தன.
ஹரித்வாரில் நடைபெற்ற ஹாக்கிப் போட்டிகளின் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் ஹரியானா மாநில அணியானது, மத்தியப் பிரதேச அணியினைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றது.
ஆடவர் பிரிவில், கர்நாடகா மாநில அணி உத்தரப் பிரதேச அணியினை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றது.