இது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளில் இந்திய ஹாக்கி விளையாட்டிற்கு அவர் ஆற்றியப் பங்களிப்புகளை இத்தினம் கௌரவிக்கிறது.
இவர் 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வெல்ல வழி வகுத்த பெருமைக்குரியவர் ஆவார்.
அவர் 185 போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 400 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.
அவரது பங்களிப்பை நன்கு போற்றும் வகையில் இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதானது 2021 ஆம் ஆண்டில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.