இந்தியாவின் தலைசிறந்த வளைதடிப் பந்தாட்ட (Hockey) வீரரான தியான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 , இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தியான் சந்த்
தியான் சந்த் பிறந்த நாள் : 29 ஆகஸ்ட் , 1905
தியான் சந்த் பிறந்த இடம் : அலகாபாத்
தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்த் (‘The Wizard’) என்று அழைக்கப்பட்டார் .
1956 ஆம் ஆண்டு தமது 42 வது வயதில் பத்ம பூசண் விருது பெற்றார்
1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் ,1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலும், 1936 ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார்.