இது இந்தியாவின் ஐந்தாவது பிரதமர் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
1979 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையில் அவர் இந்தியாவின் ஐந்தாவது பிரதமராகப் பணியாற்றினார்.
அவருடைய பதவிக் காலத்தில் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதில் முக்கியப் பங்கு வகித்ததால், அவர் பெரும்பாலும் "விவசாயிகளின் வாகையர்" என்று குறிப்பிடப் படுகிறார்.
அவர் 1939 ஆம் ஆண்டின் கடன் திருப்பிச் செலுத்தல்/ மீட்பு மசோதா போன்ற முக்கியச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering 'Annadatas' for a Prosperous Nation" என்பதாகும்.