மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது 2023 ஆம் ஆண்டு தேசிய வெளியீட்டு நேர ஆய்வு (NTRS) அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, நடப்பு ஆண்டிற்கான துறைமுக வகை வாரியான சராசரி வெளியீட்டு நேரம் (சரக்கு உள்நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கு ஆகும் நேரம்) பற்றியத் தகவல்களை வழங்குகிறது.
இதன்படி சராசரி இறக்குமதி வெளியீட்டு நேரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது:
உள்நாட்டுக் கொள்கலன் கிடங்குகளுக்கான வெளியீட்டு நேரத்தில் 20 சதவீதம் குறைப்பு,
விமானச் சரக்கு வளாகங்களுக்கு 11 சதவீதம் குறைப்பு, மற்றும்
2022 ஆம் ஆண்டினை விட 2023 ஆம் ஆண்டில் துறைமுகங்களுக்கான நேரம் 9 சதவீதம் குறைப்பு.