தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி தினம் – ஜூலை 12
July 13 , 2023 503 days 197 0
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) ஆனது இந்த ஆண்டு தனது 42வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி என்பது 1981 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுச் சட்டம் என்ற ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது, நிதி, மேம்பாடு மற்றும் மேற்பார்வைச் செயல்பாடுகளின் அடிப்படையில் கிராமப் பொருளாதாரத்தின் கிட்டத் தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
கிசான் கடன் அட்டை (KCC) திட்டமானது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது 1992 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழு-வங்கி இணைப்புத் திட்டத்தை (SHG-BLP) அறிமுகப்படுத்தியது.