TNPSC Thervupettagam

தேசிய வேளாண் விதிகள்

October 11 , 2024 45 days 72 0
  • இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) தேசிய வேளாண் விதிகளை (NAC) உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
  • இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேசியக் கட்டிட விதிகள் மற்றும் தேசிய மின் விதிகள் ஆகியவற்றினைப் போன்றது.
  • வேளாண்மையில், இயந்திரங்கள் (இழுவை இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள்) மற்றும் பல்வேறு உள்ளீடுகள் (உரங்கள், பூச்சிக்கொல்லிகள்) ஆகியவற்றிற்கான தர நிலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • ஆனால் வயல்களைப் பயிரிடத் தயார் செய்தல், சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் நீர்ப் பயன்பாடு போன்ற வேளாண் நடைமுறைகளுக்கு எந்த தர நிலைகளும் இல்லை.
  • சாகுபடிக்கான பயிர்களை தேர்வு செய்தல், நிலத்தினை தயார் செய்தல், விதைத்தல் / நாற்று நடுதல், நீர்ப்பாசனம்/வடிகால், மண் வள மேலாண்மை, தாவரங்களின் ஆரோக்கியத்தினைப் பேணுதல், அறுவடை/கதிரடித்தல், முதல்நிலை பதப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய நடைமுறைகள், நிலைத்தன்மை மற்றும் பதிவுகளைக் கையாளுதல் போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கான விதிகளை இந்தப் புதிய NAC கொண்டிருக்கும்.
  • இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு போன்ற உள்ளீடு மேலாண்மைக்கான தரநிலைகளும், பயிர்களின் சேமிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் கண்காணிப்பு அமைப்புகளுக்குமான தரநிலைகளும் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்