TNPSC Thervupettagam

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்

July 14 , 2019 1963 days 841 0
  • தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரத்தில் இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வு மையத்தைக் (India-based Neutrino Observatory) கட்டமைப்பதற்கான ஒரு திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இத்திட்டம் 51,000 டன்கள் எடை கொண்ட இரும்பு கலோரிமீட்டர் உணர்த்துக் கருவியை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு மலையில் 2 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையின் முடிவில் இருக்கும் ஒரு குகையில் இயற்கையாக நிகழும் வளிமண்டல நியூட்ரினோக்களை இது கண்காணிக்கும்.
  • நிலத்தின் மேற்பரப்பில் காணப்படாத காஸ்மிக் கதிர்களிலிருந்து வெளி வரும் இரைச்சலைக் குறைப்பதற்காக நிலத்திற்கடியிலான கண்காணிப்பு மையமாக இது கட்டமைக்கப்படுகின்றது.
  • தற்பொழுது இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் நியூட்ரினோ கண்காணிப்பு மையம் இல்லை.
  • இதே வகையைச் சேர்ந்த முதலாவது மையம் INO ஆகும்.
  • மேலும் இது குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்:
  • https://www.tnpscthervupettagam.com/neutrino-observatory/.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்