TNPSC Thervupettagam

தேன் - வேளாண் உற்பத்தியாளர் அமைப்பு திட்டம்

December 1 , 2020 1458 days 695 0
  • மத்திய வேளாண் துறை  அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் சமீபத்தில் இந்தக் கூட்டுறவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 5 மாநிலங்களில் 5 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organization - FPO) ஏற்படுத்தப்பட உள்ளன.
  • இவை பீகாரில் கிழக்கு சம்பாரன், இராஜஸ்தானில் பரத்பூர், மத்தியப் பிரதேசத்தில்  மொரேனா, உத்தரப் பிரதேசத்தில் மதுரா, மேற்கு வங்காளத்தில் சுந்தரவனம் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட உள்ளன.
  • இந்த அமைப்புகள் இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பான NAFED (National agricultural Cooperative marketing federation) என்ற அமைப்பினால்  அமைக்கப்பட உள்ளன.
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் படி, தேன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 8வது இடத்தில் உள்ளது.
  • அதே சமயம் தேன் உற்பத்தியில்  சீனா முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்