TNPSC Thervupettagam

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்

December 30 , 2023 203 days 146 0
  • அரசியல் சொற்பொழிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கேட்டுக் கொண்டுள்ளது.
  • அரசியலில் அணுகல் மற்றும் உள்ளடக்கம் என்ற பெரும் கொள்கையை ஊக்குவிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • அரசியல் கட்சிகள் இழிவுபடுத்தும் மற்றும் முற்கோல்களை நிலைநிறுத்தும்  வகையிலான மாற்றுத்திறன் தொடர்பான கருத்துக்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
  • பொது அறிக்கைகள், உரைகள், கட்டுரைகள் மற்றும் பிரச்சாரப் பரப்புரைகளில் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்துவதும் இந்த வழிகாட்டுதல்களின்படி தடை செய்யப் பட்டுள்ளது.
  • அத்தகைய மொழி, சொற்கூறுகள், சூழலிசைவு, கேலி, தரக்குறைவான குறிப்புகள் அல்லது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் எந்தவொரு செயலும் 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 92வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட தகுதியுடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்