TNPSC Thervupettagam

தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு

August 15 , 2023 342 days 196 0
  • 2023 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) என்ற மசோதாவினைச் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.
  • பிரதமர் தலைமையிலான இந்த மூன்று பேர் கொண்ட குழுவில் இந்தியத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக, மக்களவையில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர் (LoP) உட்பட, ஒரு அமைச்சரவைக் குழு அமைச்சர் ஆகியோர் இடம் பெறுவர்.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்து எடுக்கும் மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதியை (CJI) நீக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதலில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்வதற்காக வேண்டி, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக என்று ஐந்து நபர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப் படும்.
  • கடந்த மார்ச் மாதத்தில், இந்தத் தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் (LoP) மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப் படும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
  • உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வழங்கப் படும் வரையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரால் நியமிக்கப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்