TNPSC Thervupettagam

தேர்தல் ஆணையர்களை பதவிநீக்கத்திலிருந்து பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் மனு

October 26 , 2017 2458 days 1014 0
  • தேர்தல் ஆணையர்களை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையானது தெளிவற்ற முறையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியும் மேலும் இது தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சித் தன்மையும் பாதிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்டில்) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • 324வது சட்டப்பிரிவின் உட்பிரிவு 5 இன் படி தலைமைத் தேர்தல் ஆணையர் உச்ச நீதிமன்ற (சுப்ரீம் கோர்ட்) நீதிபதிகளின் நீக்கத்தைப் போலவே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
  • ஆனால் சட்ட விதியானது தேர்தல் ஆணையர்களை பதவிநீக்கம் செய்யும் நடைமுறை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையர்களை தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் பதவிநீக்கம் செய்ய முடியாது என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளது.
  • அரசியல் சட்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களைத் தலைமையாகக் கொண்டுள்ளது.
  • அவர்கள் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின்படி ஐனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையரின் பதவிக் காலமானது 6 வருடம் அல்லது 65 வயது வரை ஆகும். இவர்களும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு நிகரான சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெறுவார்கள்.
  • அவர்கள் அனைவருக்கும் ஒரே பதவிக்காலம், சம்பளம் மற்றும் ஒரே முறையில் நியமனம் இருந்தாலும் பதவிநீக்க முறை மட்டும் வேறுபடுகிறது.
  • இவ்விதமான பாகுபாடு தெளிவின்மையை ஏற்படுத்துவதோடு தன்னாட்சித் தன்மையையும் பாதிப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்