TNPSC Thervupettagam

தேர்தல் ஆணையர் பதவி விலகல்

March 12 , 2024 261 days 299 0
  • மக்களவை தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்ததையடுத்து, அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்.
  • மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு காலிப் பணியிடம் இருந்ததையடுத்து, தற்போது ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார்.
  • கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பில், பின்வருபவர்கள் அடங்கிய ஒரு குழுவினால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் படுவர் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பிரதமர்,
    • எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்
    • இந்தியத் தலைமை நீதிபதி
  • பாராளுமன்றத்தினால் தகுந்தச் சட்டம் இயற்றப்படும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிமன்ற அமர்வு கூறியது.
  • டிசம்பர் மாதத்தில், நியமனக் குழுவில் இந்தியத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சரவைக் குழுவின் அமைச்சரை சேர்ப்பதற்கான மசோதா ஒன்றினைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • 2023 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) என்ற ஒரு மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்