TNPSC Thervupettagam

தேர்தல் நேரப் பறிமுதல் மேலாண்மை அமைப்பு

October 18 , 2023 277 days 309 0
  • தேர்தல் ஆணையத்தின் சமீபத்தியத் தொழில்நுட்ப முன்னெடுப்பானது ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • பணபலத்தினைப் பயன்படுத்துதல் மற்றும் வாக்குப்பதிவு மீது செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றினை கண்காணிப்பதில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவதோடு, அத்தகையக் குற்றங்களுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அமலாக்க அமைப்புகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் இது அதிகரிக்கும்.
  • இந்தத் தொழில்நுட்பம் ஆனது தேர்தல் நேரப் பறிமுதல் மேலாண்மை அமைப்பு (ESMS) எனப் படுகின்றது.
  • இது அனைத்து மத்திய மற்றும் மாநில அமலாக்க அமைப்புகளும் இணைந்து செயல் படும் ஒரு தளமாகும்.
  • அதிகாரிகள் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட நடமாட்டம் மற்றும் சட்டவிரோதப் பணம், மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றைக் கைப்பற்றிய விவரங்களை இதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இது களத்தில் இருந்து நிகழ்நேரத் தகவல்களைப் பகிரவும் அத்தகைய நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் உளவுப் பகிர்வுகளையும் மேற்கொள்ள வழி வகுக்கும்.
  • சமீபத்திய தேர்தலுக்கும் முந்தைய தேர்தலுக்கும் இடையே பதிவான பறிமுதல்களின் அதிகரிப்பு திரிபுராவில் 2,184% ஆகவும், நாகாலாந்தில் 1,150% ஆகவும், மேகாலயாவில் 6,627% ஆகவும், குஜராத்தில் 2,862% ஆகவும், இமாச்சலப் பிரதேசத்தில் 533% ஆகவும் மற்றும் உத்தரகாண்டில் 200% ஆகவும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்