TNPSC Thervupettagam

தேவாங்கு மற்றும் கடல்பசு வளங்காப்பு மையங்கள்

December 12 , 2022 717 days 556 0
  • இந்தியாவின் முதல் தேவாங்குச் சரணாலயம் மற்றும் கடல்பசு வளங்காப்பகம் ஆகியவற்றினை அறிவித்ததையடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு உயிரினங்களுக்குமான வளங்காப்பு மையங்களையும் அமைப்பதற்கு தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
  • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தேவாங்கு வளங்காப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோரா எனுமிடத்தில் கடல்பசு வளங்காப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
  • கடல்பசு வளங்காப்பு மையமானது முழுத் திட்டத்திற்கான ஒரு ஈடுபாட்டு மையமாக செயல்படும்.
  • அங்கு கடல்சார் அருங்காட்சியகம், அரைவட்ட வடிவ அரங்கம், கடல் ஆய்வு மையம் மற்றும் குடில்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்