TNPSC Thervupettagam

தேவேந்திரகுல வேளாளர் மசோதா

March 25 , 2021 1247 days 693 0
  • சமீபத்தில் பாராளுமன்றம் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2021 என்ற மசோதாவிற்கு  ஒப்புதல் அளித்துள்ளது.
  • இம்மசோதா தமிழ்நாட்டில் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழும் ஏழு பட்டியலிடப்பட்ட சாதியினர் சமுதாயத்தை “தேவேந்திர குல வேலாளர்” என்பதின் கீழ் கொண்டு வர உள்ளது.
  • அந்த ஏழு சாதிகள்
    • தேவேந்திர குலத்தான்
    • காலாடி
    • குடும்பன்
    • பள்ளன்
    • பண்ணாடி
    • வத்திரியன்
    • கடையன் (திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்)
  • வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான பட்டியலைக் குறிப்பிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 341 குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • மேலும், இது இப்பட்டியலை மாற்றியமைக்க பாராளுமன்றத்திற்கு அனுமதி அளித்து இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்