TNPSC Thervupettagam

தைஞ்சா பசுந்தாள் உரம்

September 6 , 2024 33 days 103 0
  • புதிதாக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் (MKMK) திட்டத்தின் கீழான பசுந்தாள் உர விநியோகம் ஆனது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
  • வேளாண்மைத் துறையானது, 50% மானியத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உரத்தினை விநியோகிக்கிறது.
  • தைஞ்சா (தக்கை பூண்டு) எனப்படும் இந்த உரமானது பொதுவாக வெளிச்சந்தையில் 100 ரூபாய் மதிப்பில் விற்கப்படுகிறது.
  • இது தொகுதி அளவிலான வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் 50 ரூபாய் மதிப்பில் கிடைக்கப் பெறுகிறது.
  • தைஞ்சா ஒரு ஏக்கருக்கு சுமார் எட்டு டன் வரை உயிர்ப் பொருளை வழங்கும் திறன் கொண்டது.
  • தைஞ்சா சிதைவடையும் போது, ​​அது நெல் வளர்ப்புச் சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பலவீனமான கரிம அமிலங்களை வெளியிடுகிறது.
  • இது வழங்கும் உயிர்ப் பொருளைத் தவிர, அதன் மூலம் உருவாகும் வேர் முடிச்சுகள் ஆனது வளிமண்டல நைட்ரஜனை நிலைக்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்