தைவான் நாட்டில் குறைந்தது 25 ஆண்டுகளில் பதிவாகாத மாபெரும் நிலநடுக்கம் (7.2) சமீபத்தில் ஏற்பட்டது.
முக்கியமாக தைவான் நாடானது பசிபிக் பெருங்கடலின் "எரிமலை/நெருப்பு வளைய" பகுதியில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு உள்ளாகிறது என்ற ஒரு நிலையில் இங்கு உலகின் 90% நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன.
இந்தத் தீவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் 1980 ஆம் ஆண்டு முதல் 4.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவில் 2,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்பதோடு மேலும் 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் 5.5 ரிக்டர் அளவிற்கு மேல் இங்கு பதிவாகியுள்ளன.
எரிமலை வளையம் என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகள் மற்றும் நிலநடுக்கத் தளங்களின் தொடர் ஆகும்.
ஒரு அரை வட்டம் அல்லது குதிரையின் லாடம் போன்ற வடிவத்தில் உள்ள இது கிட்டத் தட்ட 40,250 கிலோமீட்டர்கள் நீண்டுள்ளது.
எரிமலை வளையம் பல கண்டத்தட்டுகளின் சந்திப்புப் புள்ளிகளைக் கொண்டுள்ளது.