TNPSC Thervupettagam

தைவான் – சீனா பிரச்சினை

May 18 , 2020 1561 days 739 0
  • 1949 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சீனாவின் உள்நாட்டுப் போரானது சீனாவின் தோற்கடிக்கப்பட்ட குயோமின்டாங் அல்லது சீனத் தேசியவாதிகளை தைவான் தீவிற்குச் செல்வதைக் கட்டாயமாக்கியது.
  • தைவான் நாடானது தன்னகத்தே ஆட்சி செய்யக் கூடிய மற்றும் சட்டப்படியான ஒரு சுதந்திர தேசமாகும். இது சீன நிலப் பகுதியிலிருந்து சுதந்திரம் பெற்றதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
  • இது “ஒரு நாடு, இரண்டு நிர்வாகம்” என்றறியப்படுகின்றது.
  • இது நாள் வரை தைவான் உலக சுகாதார அமைப்பின் உறுப்பினராக இல்லை.
  • தைவான் உலக வர்த்தக அமைப்பு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் பல்வேறு பெயர்களுடன் உறுப்பினராக உள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு முதல் “ஒரே சீனா” என்ற கொள்கையை அங்கீகரிக்க இந்தியா மறுப்பு தெரிவித்து வருகின்றது.
  • இவற்றிற்கிடையே நெறிசார்ந்த ராஜதந்திர உறவுகள் இல்லையென்றாலும், தைவான் மற்றும் இந்தியா ஆகியவை பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்