மத்திய புவி அறிவியல் அமைச்சகமானது, மழை, வெப்ப அலை (Heat wave) மற்றும் குளிர் அலை (cold wave) உட்பட தீவிர வானிலை நிகழ்வுகளின் குறிப்பிட்ட பகுதிக்கான மற்றும் மிகவும் துல்லியமான முன்னறிவிப்பிற்காக புதிய தொகுப்பு முன்னறிவிப்பு அமைப்பை (Ensemble Prediction System-EPS) துவக்கியுள்ளது.
இந்த புதிய தொகுப்பமைவு கணிப்பு அமைப்பானது மத்திய புவி அமைச்சகத்தின் மூன்று அமைப்புகளால் உருவாக்கப்பட்டதாகும்.
மத்திய வரம்பு வானிலை முன்னறிவிப்பிற்கான தேசிய மையம் (National Centre for Medium Range Weather Forecasting -NCMRWF)
இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology).
இந்திய வானியல் துறை (Indian Meteorological Department -IMD)
குறுகிய நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்புகளுக்கு (short-medium range weather forecasts) உயர் தர தெளிவுத்திறன் (High resolution) கொண்டிருப்பதே இப்புதிய தொகுப்பு முன்னறிவிப்பு அமைப்பின் தனிச் சிறப்பம்சமாகும்.