TNPSC Thervupettagam

தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வு (PLFS)

June 7 , 2020 1635 days 670 0
  • சமீபத்தில் தேசியப் புள்ளியியல் அலுவலகமானது (NSO - National Statistical Office) 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான  காலக்கட்டத்திற்கான தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வை (PLFS - Periodic Labour Force Survey) வெளியிட்டுள்ளது.
  • PLFS ஆனது 2017 ஆம் ஆண்டில் NSO ஆல் தொடங்கப்பட்ட கணினியை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதலாவது ஆய்வாகும்.
  • இது கிராமப்புறக் குடும்பங்களின் மீது வருடாந்திர அளவிலும் நகர்ப்புறக் குடும்பங்களின் மீது காலாண்டு அடிப்படையிலும் தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம், பணியாளர்கள் எண்ணிக்கை விகிதம், வேலையற்ற & வேலைவாய்ப்பற்ற விகிதம் போன்ற வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற குறிகாட்டிகளைக் கணித்து அது குறித்த தகவல்களைத் தருகின்றது.
  • இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2018-19 ஆம் காலக்கட்டத்தில் 5.8% ஆகக் குறைந்துள்ளது. இது 2017-18 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 6.1% ஆக இருந்தது.
  • நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதமானது 7.8%லிருந்து 7.7% ஆகக் குறைந்து உள்ளது.
  • கிராமப்புற வேலையின்மை விகிதமானது 5.3% யிலிருந்து 5 ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்திடம் உள்ள மாதாந்திரத் தரவின்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் 7.87%லிருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் 23.48% என்ற அளவில் அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்