TNPSC Thervupettagam

தொடர் புயல் அமைப்புகள்

December 22 , 2024 8 hrs 0 min 27 0
  • இதற்கு முன்னரும் வடகிழக்குப் பருவமழையின் போது வங்காள விரிகுடாவில் இந்த ஆண்டைப் போலவே தொடர் புயல் (வானிலை) அமைப்புகள் உருவாகியுள்ளன.
  • ஆனால் இந்த அமைப்புகள் பெரும்பாலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகின.
  • 1961 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 15 புயல்கள் ஏற்பட்டுள்ளன.
  • 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.
  • இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ஃபெங்கல் புயல் கரையை நோக்கி நகர்ந்த சில நாட்களில் டிசம்பர் 07 ஆம் தேதியன்று வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் தாழ்வு பகுதி உருவானது.
  • அதன்பிறகு, வங்கக் கடலில் தற்போது நன்கு அடையாளம் காணப்பட்ட / நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
  • 1999 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது போன்ற நிகழ்வுகள் உருவாகச் செய்வதில் இடைவெளி ஏற்பட்டது.
  • சுமார் எட்டு நாட்கள் இடைவெளியில் உருவாகும் இரண்டு புயல்கள் அல்லது இரண்டு காற்றழுத்தங்கள், வானிலை திரள் நிகழ்வுகள் எனப்படும்.
  • 1966 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் நான்கு வெப்பமண்டலப் புயல்களுடன் இரண்டு தனித்தனி வெப்பமண்டலப் புயல் திரள்கள் உருவாகின.
  • 2011 ஆம் ஆண்டு முதல் கடந்த 13 ஆண்டுகளில், 2013, 2016, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் நான்கு புயல் திரள்கள் உருவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்