தொட்டலத்தூர் பெருங்கற்காலத் தளம் – கர்நாடகா
October 13 , 2024
41 days
160
- சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள தொட்டலத்தூர் பெருங்கற்கால புதைவிடப் பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளன.
- கிராமத்தின் மேற்கில் ஒரு சிறிய குன்று மற்றும் அதை ஒட்டிய வயல்களில் இரும்புக் காலத்தை ஒத்த நூற்றுக்கணக்கான பெருங்கற்காலப் புதைவிடங்கள் உள்ளன.
- இந்தப் புதைவிடங்கள் பெரிய பாறைகளால் ஆன வட்டங்களைக் கொண்டிருப்பதால் இக்காலம் "பெருங்கற்காலம்" என்று அழைக்கப்படுகின்றது.
- இக்காலத்தில் இரும்புத் தொழில்நுட்பமானது பயன்பாட்டுக்கு வந்ததால் இது இரும்புக் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
- தென்னிந்தியாவில், இந்த காலமானது கி.மு. 1200 முதல் கி.பி. 300 வரையிலான கால இடைவெளியில் பரவலாக காணப்பட்டது.
Post Views:
160