திருவனந்தபுரத்தில் உள்ள தொன்னக்கல் எனுமிடத்தில் உள்ள உயர்நிலை நச்சுயிரியல் கல்வி நிறுவனத்தினை (IAV) சேர்ந்த அறிவியலாளர்கள், ஆய்வகத்தில் தொற்றாத வகையிலான நிபா வைரஸ் போன்ற துகள்களை (VLPs) உருவாக்கும் ஒரு புதிய வழிமுறையினை உருவாக்கியுள்ளனர்.
அவை காட்டு வகை நிபா வைரஸை (NiV) ஒத்துள்ளன.
இந்தப் புதிய வழிமுறையானது உயிரிப் பாதுகாப்பு நிலை-2 (BSL) ஆய்வகத்தில் NiV வைரசிற்கு எதிரான நடுநிலைப் படுத்தும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கான மாற்று, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தளத்தை வழங்குகிறது.
மிகவும் நோய்த் தொற்று மிக்க பாராமிக்ஸோவைரஸ் வகையினைச் சேர்ந்த விலங்கு வழி பரவும் வைரஸ் ஆன இந்த நிபா வகை வைரசினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் உயிரிழப்பு விகிதம் 80% வரை இருக்கும்.