TNPSC Thervupettagam

தொற்றுநோய்களின் வரலாறு

April 26 , 2020 1582 days 615 0
  • கோவிட்-19 ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மட்டும் அல்லாமல்  பொருளாதார நெருக்கடியின் மோசமான மற்றும் ஆழமான வரலாற்றிற்கும் மக்களை உட்படுத்தியுள்ளது.
  • இது உலகின் ஒவ்வொரு பெரிய பொருளாதாரச் சக்தியையும் முடங்கியுள்ளது.
  • வரலாற்றில் இதற்குச் சமமான அளவில் வெகுவாக தாக்கங்களை உருவாக்கிய பல தொற்றுநோய்கள் இடம் பெற்று உள்ளன.
  • அவை ஜஸ்டினியன் பிளேக், பிளாக் டெத் மற்றும் ஸ்பானிஷ் காய்ச்சல் ஆகும்.
  • ஜஸ்டினியன் பிளேக் 6 ஆம் நூற்றாண்டில் தாக்கிய ஒரு கொடிய தொற்று நோயாகும்.
  • இது எகிப்திலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் வரை பரவியிருந்தது.
  • பிளாக் டெத் நோயானது 200 மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்றது.
  • இது சீனா, சிரியா, இந்தியா மற்றும் எகிப்தைத் தாக்கியது.
  • இந்த நோய் 1347 ஆம் ஆண்டில் ஐரோப்பாவைத் தாக்கியது.
  • முதலாம் உலகப் போரின் கடைசிக் கட்டத்தில் ஸ்பானிஷ் காய்ச்சல் ஆனது தாக்கியது.
  • இது முதலில் ஐரோப்பாவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஆசியா மற்றும் அமெரிக்காவிலும் பரவியது.
  • இந்த நோய் முதல் உலகப் போரில் ஜெர்மணியின் படைப் பிரிவுகளைப் பலவீனப் படுத்தியது மற்றும் அந்தப் போரில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக கருதப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்