நமது சூரிய மண்டலத்தில் 2018 VG18 என்று அறியப்படும் மிக தொலைதூரத்தில் உள்ள பொருளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு "ஃபார்அவுட்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதன்முதலில் சூரியனிலிருந்து 100 AU (Astronomical Unit- வானவியல் அலகு) தொலைவில் கிட்டத்தட்ட 120 AU அல்லது 11 பில்லியன் மைல்கள் தூரத்தில் கண்டறியப்பட்ட பொருள் இதுவேயாகும்.
1 AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் ஆகும்.
சூரியலிருந்து 80 AU தொலைவில் உள்ள, "தி கோப்ளின்" என்றழைக்கப்படும் மற்றொரு தொலைதூர பொருளையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சூரியனிலிருந்து இரண்டாவது மிக தொலைதூர பொருளாக கண்டறியப்பட்ட ஏரிஸ் 96 AU தொலைவில் உள்ளது.
குறுங்கோளான புளுட்டோ தற்போது 34 AU தொலைவில் உள்ளது.