உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட நீரூக்கடியிலான ஒரு தொலைதூர செயல்பாட்டு வாகனமானது சென்னையில் உள்ள தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (NIOT - National Institute of Ocean Technology) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகத்தினால் (NRDC - National Research Development Corporation) “தேசிய மெச்சத்தக்க புத்தாக்க விருது” வழங்கப்பட்டுள்ளது.
இந்த ROV ஆனது அந்தமானில் உள்ள பவளப் பாறைகள், அரேபியக் கடலில் உள்ள கடல் களைகள் மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பிரியதர்ஷனி ஏரி ஆகியவற்றில் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை நடத்தும் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.