TNPSC Thervupettagam

தொலைந்த மாயன் நகரம்

November 5 , 2024 24 days 138 0
  • மெக்ஸிகோவில் காடுகளின் பரவலில் மறைந்து போன ஒரு பெரிய மாயன் நகரம் ஆனது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • தென்கிழக்கு மாநிலமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாவட்டங்களை இணைக்கும் தரைப்பாதைகள் மற்றும் சுற்று மாளிகையரங்கம் ஆகியவற்றினைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • LiDAR, அல்லது ஒளி மூலமான கண்டறிதல் மற்றும் எல்லையறிதல் எனப்படும் தொலை உணர்வி தொழில்நுட்பம் ஆனது இதனை மீண்டும் உருவாக்கப் பயன்படுத்தப் பட்டு உள்ளது.
  • இந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு குளத்தின் பெயரால் இந்தப் பகுதிக்கு வலேரியானா என்று பெயரிட்டுள்ளனர்.
  • மொத்தத்தில், ஆராய்ச்சியாளர்கள் வலேரியானாவில் 6,764 கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு அளவுகளில் உள்ள பிற கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடியிருப்புகளை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த மாயன் நாகரிகமானது, தற்போதைய பெலிஸ், எல் சால்வடார், கௌத்திதமாலா மற்றும் தென்கிழக்கு மெக்ஸிகோ வரையில் பரவி, கி.மு.1000 முதல் கி.பி. 1500 ஆம் ஆண்டு வரை நீடித்திருக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்