மெக்ஸிகோவில் காடுகளின் பரவலில் மறைந்து போன ஒரு பெரிய மாயன் நகரம் ஆனது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மாநிலமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாவட்டங்களை இணைக்கும் தரைப்பாதைகள் மற்றும் சுற்று மாளிகையரங்கம் ஆகியவற்றினைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
LiDAR, அல்லது ஒளி மூலமான கண்டறிதல் மற்றும் எல்லையறிதல் எனப்படும் தொலை உணர்வி தொழில்நுட்பம் ஆனது இதனை மீண்டும் உருவாக்கப் பயன்படுத்தப் பட்டு உள்ளது.
இந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு குளத்தின் பெயரால் இந்தப் பகுதிக்கு வலேரியானா என்று பெயரிட்டுள்ளனர்.
மொத்தத்தில், ஆராய்ச்சியாளர்கள் வலேரியானாவில் 6,764 கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு அளவுகளில் உள்ள பிற கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடியிருப்புகளை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த மாயன் நாகரிகமானது, தற்போதைய பெலிஸ், எல் சால்வடார், கௌத்திதமாலா மற்றும் தென்கிழக்கு மெக்ஸிகோ வரையில் பரவி, கி.மு.1000 முதல் கி.பி. 1500 ஆம் ஆண்டு வரை நீடித்திருக்கக் கூடும்.