TNPSC Thervupettagam

தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க மறுக்கும் அதிகாரம்

February 24 , 2024 146 days 229 0
  • தமிழ்நாடு சட்டமன்றம் ஆனது கிராமப் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய அமைப்புகளின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • தொழில்துறை நோக்கங்களுக்காக குறிப்பிட்ட பகுதிகளை ஒதுக்கவும் அல்லது தொழிற் சாலைகளுக்கு அனுமதி வழங்க மறுப்பதற்கும் முன்பு அவற்றிடம் அதிகாரம் இருந்தது.
  • இந்த மசோதா வணிகம் செய்வதை எளிதாக்குதல் என்ற நோக்கினை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • தற்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதாவானது, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்து, ‘பஞ்சாயத்து ஒன்றிய சபைக்கு’ பதிலாக உரிமங்கள் மற்றும் அனுமதிகளை வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்குமான அதிகாரியாக ஓர் ‘ஆய்வாளரை’ நியமிக்கும் விதியை சேர்த்துள்ளது.
  • விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் விதிகளில் "சட்டத்திற்குப் புறம்பான அல்லது ஆபத்தான வர்த்தகம்" என்ற வார்த்தைகளை நீக்கவும் இது முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்