தொழிற்துறைகளுக்கான ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்தும் அவசரச் சட்டம்
November 3 , 2017 2555 days 1331 0
மாநிலத்தில் முதலீடு செய்யும் திட்டம் கொண்டுள்ள முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான இணையவழி தகவு வசதியை தமிழக அரசு தொடங்கியது. (அறிமுகப்படுத்தியது.)
easybusiness.tn.gov.in என்ற இணையவாயிலை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இது 11 துறைகளை ஒருங்கிணைத்து 37 சேவைகளை இணையவழியில் அளிக்கும்.
இந்த தகவு,
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்
கட்டணம் செலுத்துதல்
அனுமதியளிக்கப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்தல்
அனுமதிகளை புதுப்பிப்பது மற்றும் அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 37 விதமான சேவைகளைப் பெறுவது போன்றவற்றிற்குப் பயன்படுகிறது.
தமிழக அரசு, வணிகத்தை எளிதாக்கும் அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்தி புதிய சட்ட விதிகளை அறிவித்தது.
பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற்காகவும் வணிக சீர்திருத்த செயல் திட்டத்தின் சட்டங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் இயற்றவும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் பரிந்துரைகளை மாநில அரசு பின்பற்றியுள்ளது.
செயல்படுத்தும்முகமை
பெரிய தொழில்துறை நிறுவனங்களை (10 கோடிக்கும் மேலான மூதலீடுகள்) பொறுத்த வரையில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுச் செயலகமே (TNIGEPB) செயல்படுத்தும் முகமை ஆகும்.
சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்துறை பிரிவுகளைப் பொறுத்த வரையில் (10 கோடி வரை உள்ள முதலீடுகள்), தொழில் மற்றும் வர்த்தக மண்டல கூட்டு இயக்குநர் அலுவலகம் சென்னை மாவட்டத்திற்கு செயல்படுத்தும் முகமை ஆகும்.
பிற மாவட்டங்களில் மாவட்ட அளவிலான மாவட்ட தொழிற்சாலை மையங்களே (DLC) செயல்படுத்தும் முகமை ஆகும்.