TNPSC Thervupettagam

தொழிற்நுட்ப ஆதரவு மையம்

November 9 , 2017 2602 days 947 0
  • WIPO’S TISC திட்டத்தின் கீழ் (TISC-Technology and Innovation Support Center) சென்னையில் தொழிற்நுட்பம் மற்றும்  புத்தாக்க ஆதரவு மையம் (TISC) அமைக்க தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையானது (The Department of Industrial Policy and Promotion-DIPP) சென்னை அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இது உலக அறிவு சார் சொத்துரிமை நிறுவனத்தின் (WIPO- World Intellectual Property Organisation) TISC திட்டத்தின் கீழ் இந்தியாவில் அமைக்கப்படும் இரண்டாவது மையமாகும்.
  • சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை மையத்தில் (Centre for Intellectual Property Rights) இந்த ஆதரவு மையம் அமைக்கப்பட உள்ளது.
  • உயர் தர தகவல் தொழிற்நுட்பங்கள் மற்றும் அதுசார் சேவைகளை வளரும் நாடுகளிலுள்ள தொழிற்முனைவோர்களுக்கு அணுகிடத்தக்க வகையில் வழங்கி அதன் மூலம் அவர்கள்  அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்கிடவும், பாதுகாத்திடவும், நிர்வகித்திடவும், புத்தாக்க ஆற்றலை சரியாக பயன்படுத்திடவும் உதவுவதே WIPO’S TISC திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்