TNPSC Thervupettagam

தொழிற்முறை கல்லூரி இடங்கள்: தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு

August 7 , 2018 2307 days 1455 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த NEET தேர்வில் (National Eligibility Cum Entrance Test) வெற்றி பெற்ற இரண்டு மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
  • இம்மனுவின் படி 69% இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமையான, எந்தவொரு மனிதனும் சாதி, மதம், பாலினம், இனம் மற்றும் இதர விஷயங்களின் அடிப்படையில் பாகுபடுத்தப்படக் கூடாது என்பதற்கு எதிரானதாகும்.
  • உச்ச நீதிமன்றம் ஒதுக்கிய 50% இட ஒதுக்கீட்டினை வேண்டி இம்மனு உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது.
  • அதன் விளைவாக தமிழ்நாடு 69% இட ஒதுக்கீட்டிற்கு வழி செய்யும் வகையில் சட்டம் ஒன்றை இயற்றியது. இச்சட்டம் அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • கொள்கை அடிப்படையிலான 69% இட ஒதுக்கீட்டின் நியாயத் தன்மையை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான குழு ஜூலை 2011-ல் ஒரு அறிக்கையினை தாக்கல் செய்தது.
  • இந்த அறிக்கையானது எந்தவொரு குறிக்கோள் அடிப்படையிலான விதிகளும் இல்லாமல் சாதாரணமாக 1985-ன் அம்பா சங்கர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 69% இடஒதுக்கீட்டினை உறுதி செய்துள்ளது என இந்த மனு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்