TNPSC Thervupettagam

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்

October 1 , 2024 2 days 55 0
  • மாறுநிலை அகவிலைப் படியை திருத்தி அமைத்ததன் மூலம் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய விகிதங்களை ஒரு நாளைக்கு 1,035 ரூபாய் வரை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, கட்டுமானம், பெருக்குதல், துப்புரவுப் பணி, சரக்கு ஏற்றுதல் & இறக்குதல் ஆகியவற்றில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 'A' பிரிவில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 783 ரூபாய் (மாதம் 20,358 ரூபாய்) ஆக இருக்கும்.
  • பகுதியளவு திறன் சார்ந்தத் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு நாளைக்கு 868 (மாதத்திற்கு 22,568 ரூபாய்) ஆகும்.
  • இதன்படி திறன் சார் தொழில், எழுத்தர் மற்றும் ஆயுதம் இல்லாத கண்காணிப்புப் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 954 ரூபாய் ஆகும் (மாதத்திற்கு 24,804 ரூபாய்).
  • இதன்படி அதிகளவு திறன் சார்ந்த மற்றும் ஆயுதங்களைக் கொண்ட கண்காணிப்புப் பணியாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய விகிதம் ஒரு நாளைக்கு 1,035 ரூபாய் (மாதத்திற்கு 26,910 ரூபாய்) ஆகும்.
  • இந்தப் புதிய ஊதிய விகிதங்கள் ஆனது 2024 அம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
  • கடைசியாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்