இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அமைப்புகள் ஆனது, நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்றுவதில் இருந்து எவ்வித விலக்கும் அளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெளிநாட்டின் தூதரக நிறுவனங்களில் பணியாற்றும் அந்த இந்தியர்கள் தங்கள் பணி புரியும் முதலாளிகளுக்கு எதிராக ஒரு தொழில்துறைத் தீர்ப்பாயத்தை அணுகுவதற்கு முன், உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 86வது பிரிவின் கீழ், அவர்கள் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வியன்னாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அரசுமுறை உறவுகள் மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா ஏற்றுக் கொண்ட ஒரு உடன்படிக்கைக்குச் சட்டத்தின் ரீதித் தன்மையினை வழங்கச் செய்வதற்காக வேண்டி, பாராளுமன்றமானது 1972 ஆம் ஆண்டு அரசுமுறை உறவுகள் (வியன்னா உடன்படிக்கை) சட்டத்தினை இயற்றியது.
ஒரு தூதரக நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டினர் மட்டுமே சேவையினைப் பெறும் அரசின் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்று உடன்படிக்கையின் 33 வது பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
எனவே, அந்தச் சரத்தில் வழங்கப்பட்டுள்ள விலக்கு சேவையினைப் பெறும் அரசின் குடிமக்களுக்குப் பொருந்தாது.
1947 ஆம் ஆண்டு தொழில்துறை தகராறுகள் (ID) சட்டத்தின் 25Fவது பிரிவானது, ஒரு நிரந்தர ஊழியரைப் பணி நீக்கம் செய்வதற்கு முன், ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட பணி ஆண்டிற்கும் சுமார் 15 நாட்கள் அளவிலான சராசரி சம்பளத்திற்குச் சமமான இழப்பீட்டை ஒரு முதலாளி வழங்க வேண்டும் என்று கோருகிறது.