TNPSC Thervupettagam

தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி

October 18 , 2024 38 days 84 0
  • தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் மூலம் (IIP) அளவிடப்படுகின்ற, இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தியானது, 21 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • இந்தத் தரவு ஆனது தேசிய புள்ளியியல் அலுவலகத்தினால் (NSO) வெளியிடப் பட்டு உள்ளது.
  • ஒட்டு மொத்தத் தொழில்துறை உற்பத்தியானது ஜூலை மாதத்தில் 4.7 சதவீதமாகவும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10.9 சதவீதமாகவும் வளர்ந்துள்ளது.
  • சுரங்க உற்பத்தியானது ஆகஸ்ட் மாதத்தில் 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என்ற நிலையில் இது ஜூலை மாதத்தில் 3.8 சதவீதமாக இருந்தது மற்றும் முந்தைய ஆண்டில் 12.3 சதவீதமாக இருந்தது.
  • ஜூலை மாதத்தில் 7.9 சதவீதமாக இருந்த மின் உற்பத்தியும், அதற்கு முந்தைய ஆண்டு பதிவான 15.3 சதவீதத்துடன் ஒப்பிடச் செய்யும் போது, ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 3.7 சதவீதமாக அது குறைந்துள்ளது.
  • IIP தரவுகளின்படி, துறை ரீதியாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 23 உற்பத்தி துறைகளுள் 11 துறைகளின் உற்பத்தியில் குறைவு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்