உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) நான்காவது தொழில் துறைப் புரட்சிக்கான மையத்தின் (C4IR) திறப்பு விழா ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியலில் கவனம் செலுத்தும் உலகின் முதலாவது கருப்பொருள் சார் மையம் இதுவாகும்.
C4IR என்பது நிகழ் உலகச் சான்றுகள், சுகாதாரப் பகுப்பாய்வு மற்றும் தகவல், மற்றும் மென்பொருளினை ஒரு மருத்துவச் சாதனமாகக் கருதுதல் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளின் மீது கவனம் செலுத்துகிறது.