தொழில்நுட்ப உதவியுடன் முதல் கால்நடைகள் கணக்கெடுப்பு
September 19 , 2018 2260 days 904 0
தமிழ்நாடானது தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும் தனது முதல் கால்நடை கணக்கெடுப்பான 20 வது கால்நடைகள் கணக்கெடுப்பை நடத்தவுள்ளது.
இந்த கால்நடை கணக்கெடுப்பானது வரைபட்டிகையின் (Tablet) உதவியோடு, பல்வேறு இடங்களில் கால்நடைகளின் புகைப்படங்களை எடுத்து கணக்கிடப்படும்.
இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேலும் மூன்று மாத காலத்திற்கு (வழக்கமாக 1 மாதம்) கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.
2002 லிருந்து கால்நடை கணக்கெடுப்பு தாமதமாக நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியால் 2017-ல் குறித்த காலத்தில் இக்கணக்கெடுப்பை நடத்த இயலவில்லை.