ஜெனரல் அட்டாமிக்ஸ் குளோபல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்திய-அமெரிக்க தலைமை நிர்வாகி விவேக் லால் அவர்கள், இந்திய அமெரிக்க வர்த்தகக் குழுமத்தின் மதிப்பு மிக்க தொழில்முனைவோர் தலைமைத்துவ விருதுகளுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் அவர் ஆற்றியப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்திய அமெரிக்க வர்த்தகக் குழுமமானது 1968 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒத்துழைப்புக்கான முதன்மையான இருதரப்புக் கழகம் இதுவாகும்.