TNPSC Thervupettagam

தொழில் செய்வதற்கு உகந்ததான வருடாந்திர இந்திய அறிக்கை

November 30 , 2018 2189 days 626 0
  • ஐக்கிய இராச்சிய இந்திய வர்த்தக மன்றமானது (UKIBC - UK India Business Council) சமீபத்தில் தனது 4-வது “ஐக்கிய ராச்சியத்தின் கண்ணோட்டத்தில் தொழில் செய்வதற்கு உகந்ததான வருடாந்திர இந்திய அறிக்கை” என்பதை வெளியிட்டுள்ளது.
  • இது இந்தியாவில் ஐக்கிய இராச்சியத்தின் தொழிலகங்கள் செயல்படுவதற்கு ஊழல் ஒரு தடையாக உள்ளது என்ற பார்வை 2015-லிருந்து தற்போது பாதியாகக் குறைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.
  • தற்போது 25% ஐக்கிய இராச்சியத்தின் தொழிலகங்கள் ஊழலை ஒரு தடையாக பாவிக்கின்றன. இது 2015-ல் 51% ஆக இருந்தது.
  • 46% ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தக நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு தங்களது முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளன.
  • மேலும் அவற்றுள் 25 சதவிகிதத்தினர் இந்தியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி இந்த புதிய முதலீடுகளை செய்வதில் திட்டமிட்டு இருக்கின்றனர்.
    • அவர்கள் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் புதிய வாய்ப்புகளை தேடுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்