தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்திற்கானத் திருவிழாவை (Festival of Innovation and Entrepreneurship -FINE) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புது தில்லியில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்திய தேசியப் புத்தாக்க அறக்கட்டளை (National Innovation Foundation-India-NIFI) மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையோடு (Department of Science and Technology - DST) இணைந்து ராஷ்டிரபதி பவன் இந்த 5 நாள் திருவிழாவை நடத்தியுள்ளது.
இத்திருவிழாவின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காந்திய இளம் தொழில்நுட்பப் புத்தாக்க விருதுகளை (Gandhian Young Technological Innovation Awards) வழங்கினார்.
புத்தாக்கவியலாளர்களுக்கு (innovators) ஓர் ஆதரவு சூழலமைப்பை உருவாக்கி அதனை வளர்ப்பதற்காகவும் அவர்களுடைய புத்தாக்கங்களை (Innovation) அங்கீகரிப்பதற்காகவும், அவற்றிற்கு மரியாதை வழங்குவதற்காகவும், அவற்றினைக் காட்சிப்படுத்தி அவற்றிற்கு வெகுமதியளிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் தொடக்கமே தொழில் முனைவு மற்றும் புத்தாக்கத்திற்கான திருவிழாவாகும்.