TNPSC Thervupettagam

தொழில் ரீதியாகப் பின்தங்கிய மாநிலங்களின் முன்னேற்றம்

July 26 , 2017 2550 days 1001 0
  • பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியில் மாநிலஅரசு முக்கியமான பொறுப்பு வகிக்கிறது.
  • தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் கீழ் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மாநிலத்தின் தொழில்ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களில் தொழில்மயமாக்கலை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாநில அரசுகளின் முயற்சிகளை ஊக்குவிக்கிறது.
  • வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களில் தற்போதுள்ள தொழில்துறை பூங்காக்கள் / தோட்டங்கள் / பகுதிகள் ஆகியவற்றில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக "மாற்றியமைக்கப்பட்ட தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம்"(MIIUS)என்ற திட்டம் உள்ளது.
  • எனினும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (CCEA) கடந்த வருடம் பின்தங்கிய மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்ட தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை(MIIUS) செயல்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.
  • வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கான எதிர்காலக் கொள்கையை வலியுறுத்தி நிதிஆயோக்கின் தலைமைநிர்வாக அதிகாரி தலைமையில் ஒரு குழுவினை இவ்வமைச்சரவைக் குழு அமைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்