TNPSC Thervupettagam

தொழுநோய் ஒழிப்பு – ஜோர்டான்

September 25 , 2024 3 days 73 0
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரப்பூர்வச் சரிபார்ப்பு சான்றிதழைப் பெற்று, தொழுநோயை ஒழித்த உலகின் முதல் நாடாக ஜோர்டான் திகழ்கிறது.
  • இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு, ஒரு நாட்டில் பதிவான தொழுநோயின் பாதிப்பு எண்ணிக்கையானது 10,000 மக்கள்தொகைக்கு 1 பேருக்கும் கீழே குறைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
  • அந்த நோயைக் கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும், பரவாமல் தடுப்பதற்கும் பயனுள்ள அமைப்புகளும் இருக்க வேண்டும்.
  • தொழுநோய் என்பது ஹேன்சன் நோய் என்றும் அழைக்கப்படுவதோடு இது மைக்கோ பாக்டீரியம் லெப்ரேயினால் ஏற்படும் ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும்.
  • இந்த நோயானது தோல், புற நரம்பு மண்டலம், மேல் சுவாசக் குழாயின் சீதமென்சவ்வு (மியூகோசல்) மேற்பரப்புகள் மற்றும் கண்களைப் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்