TNPSC Thervupettagam

தோடர் பழங்குடியினர் - மோத்வேத் திருவிழா

January 12 , 2025 4 days 65 0
  • தோடர் பழங்குடியினர் புத்தாண்டைக் குறிக்கும் வகையிலான தங்கள் பாரம்பரிய 'மோத்வேத்' திருவிழாவினைக் கொண்டாடினர்.
  • தமிழ்நாட்டின் நீலகிரி மலைகளில் வசிக்கும் பழமையான திராவிட இனக்குழுக்களில் இக்குழுவினரும் ஒருவர் ஆவர்.
  • தெங்கிஷ் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்போ கோவிலில் அவர்களது பிரார்த்தனைகளுடன் இத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.
  • சைவ உணவு முறையினை கடுமையாகப் பின்பற்றும் இந்த தோடர் இன மக்கள் இறைச்சி, மீன் மற்றும் குஞ்சு பொரிக்கக் கூடிய முட்டைகளை உட்கொள்வதைத் தவிர்க்கின்றனர்.
  • தோடர் இன மக்கள் பைகி, பெக்கன், குட்டன், கென்னா மற்றும் டோடி எனும் ஐந்து குலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தக் குழுவினர் எழுத்து வடிவம் இல்லாத வகையில் தங்களுக்கென ஒரு சொந்த மொழியினைக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்