TNPSC Thervupettagam

தோமர் அரசர் இரண்டாம் அனங்கபாலர்

March 24 , 2021 1220 days 588 0
  • சமீபத்தில் அரசானது, 11வது நூற்றாண்டைச் சேர்ந்த தோமர் வம்ச அரசரான  இரண்டாம் அனங்கபாலரின் மரபினை பிரபலப்படுத்துவதற்காக ஒரு குழுவினை அமைத்து உள்ளது.
  • இரண்டாம் அனங்கபாலர் அவர்கள் தோமர் வம்சத்தினைச் சேர்ந்தவராவார்.
  • அவ்வம்சத்தினர் 8 ஆம் நூற்றாண்டு மற்றும் 12 ஆம் நூற்றாண்டு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலங்களில் தற்போதைய தில்லி மற்றும் ஹரியானா பகுதிகளில் ஆட்சி செய்தனர்.
  • இரண்டாம் அனங்கபால தோமரை அடுத்து அவரது பேரன் பிரித்திவிராஜ் சௌகான் அரியணை ஏறினார்.
  • சௌகான் தரைன் போரில் (தற்போதைய ஹரியானா) குரித் படைகளை (Ghurid forces) தோற்கடித்தார்.
  • அப்போருக்குப் பிறகு 1192 ஆம் ஆண்டில் டெல்லி சுல்தானியமானது நிறுவப் பட்டது.
  • 8 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் அனங்க பாலரின் ஆட்சியின் போது  தோமர் வம்சம் தனது தலைநகரைத் தில்லிகாபுரிக்கு (தில்லி) மாற்றியது.
  • இவரே டெல்லி எனும் அதன் தற்போதைய பெயரை அதற்கு வழங்கியவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்