NTPC லிமிடெட் நிறுவனமானது, செறிவூட்டப்பட்ட செயல்பாட்டுக் காலத்திற்கான மிக மேம்பட்ட அணுசக்தியை (ANEEL) உருவாக்குதல் மற்றும் அதன் பயன்பாடு குறித்து ஆராய்வதற்காக வேண்டி அமெரிக்காவின் கிளீன் கோர் தோரியம் எனர்ஜி (CCTE) என்ற நிறுவனத்துடன் ஓர் உத்தி சார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ANEEL என்பது அழுத்த கன நீர் உலைகளுக்கான (PHWRs) தோரியம் அடிப்படையிலான எரிபொருளாகும்.
ANEEL எரிபொருளில், தற்போதுள்ள PHWR உலைகளில் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், அணுக்கழிவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகியவை அடங்கும்.
இது உள்நாட்டில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் ஒரு மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் அணுசக்திப் பரவல் எதிர்ப்பையும் உள்ளடக்கியது ஆகும்.