இந்திய மருந்துத் தாவரமான கடம்ப மரத்தினுடைய (அந்தோசெபாலஸ் கடம்பம்) பச்சையம் நிறைந்த உயிரி மூலக்கூறு சாற்றின் நானோதுகள் உருவாக்கமும் (Nano Particle Formulation) அருகாமை – அகச்சிவப்பு சாயமும் (Near – Infrared dye) இணைந்து தோல்புற்றுச்செல்களை தேர்ந்த வகையில் கொல்லப்படுவதை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களின் உருவாக்கத்தின் போது தாவரச்சாறானது புற்றுச் செல்களுக்கு நச்சாக விளங்குகிறது. அப்போது, ஒளிவெப்பச் சிகிச்சை (Photo thermal therapy) மூலமாக புற்றுச்செல்களை அழிப்பதற்கு சாயமானது உதவுகிறது.
அருகாமை – அகச்சிவப்பு ஒளியில் கதிர்வீச்சு செய்யப்படும் போது சாயம் வெப்பமடைகிறது. மேலும் பல்படிவ சவ்விலிருந்து சாறு வெளியேற்றத்தினை எளிதாக்குகிறது.
நான்கு அல்லது ஐந்து நிமிட கதிர்வீச்சு செய்யப்படுதலுக்கு பின்னர் 80 சதவிகித புற்றுச்செல்கள் கொல்லப்படுகின்றன.
ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியத்தொழில்நுட்ப நிறுவனங்களின் இரண்டு குழுக்களும் ஒன்றாக இணைந்து தோல்புற்றுச் செல்களைப் பயன்படுத்தி இந்த வெற்றியினை சாதித்துள்ளன.
ஒளிவெப்பசிகிச்சை : (Photo thermal therapy)
புற்றுநோய் உட்பட பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு மின்காந்த கதிர்வீச்சினை (Electro Magnetic Radiation) பயன்படுத்தி சிகிச்சையளிக்கும் முறையே ஒளிவெப்ப சிகிச்சை ஆகும்.