கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவிலில் மார்ச் 06 ஆம் தேதியன்று, தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் ஒன்று கூடி தோள் சீலைப் போராட்டம் அல்லது மாரு மரக்கால் சமரத்தின் 200வது ஆண்டு நிறைவு நினைவு விழாவினை நடத்தினர்.
இது பழைய திருவிதாங்கூரில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மேல் உடலை மறைக்கும் வகையில் சேலை அணிவதற்கான உரிமையினைப் பெறுவதற்காக பல தசாப்தங்களாக நடத்திய ஒரு போராட்டமாகும்.
திருவிதாங்கூர் என்பது இன்றைய தெற்கு கேரளா மற்றும் தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்புப் பகுதியினை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவதற்கான உரிமையானது மேல் சாதிப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்தது.
1812 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் மகாராணி அவர்கள், கிறித்தவச் சமயத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மேலாடை (ரவிக்கை) அணிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
சமூக சீர்திருத்தவாதி அய்யா வைகுண்ட சுவாமி அவர்கள், பெண்களை ஒன்று திரட்டி அவர்களுடன் இணைந்து பல்வேறு வகையிலான கூட்டங்களை நடத்தி உரிமை கோரல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மேலாடை கிளர்ச்சியின் முதல் கட்டமானது 1822-1823 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றது.
இந்தக் கிளர்ச்சியின் இரண்டாம் கட்டமானது 1827-1829 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றது.
1958-1859 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட கிளர்ச்சியின் போது தான், வகுப்பு, சாதி மற்றும் மதம் என பாராமல் அனைத்துப் பிரிவு பெண்களும் மேல் ஆடை அணியலாம் என அனுமதி வழங்கப்பட்டது.